2008-02-26

தாயே! மறுவாழ்வு என்னுடன்...

தாய்தந்தை பெற்ற இன்பத்தில் - நான்
பிறந்தேன் இவ்வையத்தில்
நாய்பாடாய் நானலைந்து
துன்பப்படவோ தாயே!


காலத்தில் கூட
கால்கள் நீரில் தயங்கியும் மிதியாது
கண்கலங்கி சிந்துவதேனோ தாயே!


உலகத்தை உள்ளங்கை வைத்து
வையம் பெறும் பாடம்
என் விரல் நுனிகூட வராதோ தாயே!


கூடி பிறந்ததெல்லாம்
எனக்கு பகையானால் - என்
பகை தீர்க்காயோ தாயே!


எதிரிகள் வேளம்போல் மதங்கொண்டு
என்முகம் தேடியலைவர் - அவர்
திருந்த வழிசமைப்பாயோ தாயே!


சொந்த காலில் நின்று வேலைசெய்ய
வஞ்சக செட்டிகள் வாய்க்குள் காலாட்டி
வஞ்சிக்கும் வேதனைகள்
களையாயோ தாயே!


ஏழைக்கு இரங்கும் இந்த
ஏழையின் நிலைதனை புரியாமல்
தோற்கடிக்கும் அசுர முகங்கள்
அளிப்பாயோ தாயே!


நன்றி கெட்ட உலகில்
நண்பர் எல்லாம் நரிகளாக
மாறுவதேனோ தாயே!


பண்ணாத குறும்பெல்லாம் பண்ணியதென்று
பழிசுமத்த தடுத்து நிறுத்தாயோ தாயே!


பொல்லாத குற்றமெல்லாம்
நான் புரிந்தது என்று
பஞ்சாயத்தில் பொய்யுரைப்பர்
கை கோடுப்பாயோ தாயே!


என் குற்றமில்லா வழக்கெல்லாம்
வாதாடி வெல்ல லஞ்சத்தின் வஞ்சகனை
லகரத்தில் நிலைநிறுத்தும் லஞ்சகனை
ஒளிக்காயோ தாயே!


தேவாரம் சொல்லியென்
மரமண்டைக்கு ஏறாமல் போக
தண்டனைகள் ஏனோ தாயே!


இறைவன் உறைவிடத்தில்
விளக்கேற்றி தலைவாசல் வர
இழிசாதியென்று மேல்சாதி வதைக்கும்
முகம் கொடுப்பாயோ தாயே!


சுற்றம் இன்பத்தில் நிலைத்திட
என்மனம் மகிழ்ச்சியில் திளைத்திட
நல் மனையாளை அமையாயோ தாயே!


இல்லறத்தில் நல்லறமாய்
மறு வீட்டு மனிதர்கள் நின்
மனையாள் நயப்படைக்கும்
வஞ்சனைகள் தீர்க்காயோ தாயே!


இன்பத்தில் இறைவனாய்
இனிமையில் குடும்பமாய்
எளிமையில் ஏழையாய்
இரக்கத்தில் சகலராய்
அறிவுக்கு அப்பாவாய்
ஆசைக்கு அம்மாவாய்
என் இருள் நீக்கி ஒளி பெருக
தாயே!
உனை வரம் கேட்கிறேன்
என் தாயாக மறுவாழ்வும் மலர்ந்திட...

1 கருத்து:

  1. Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Câmera Digital, I hope you enjoy. The address is http://camera-fotografica-digital.blogspot.com. A hug.

    பதிலளிநீக்கு