விழித்திரு மனிதா...!
செந்தணல் வீதியிலே
வெட்ட வெளியிலே
விட்ட வெளியில்
நொந்து நொந்து சாகும்
இந்த கொள்ளிகட்டை!
மனிதா நாளையும்
இரவு பகலாகலாம் பகல் இரவாகலாம்
மேற்கினில் பரிதி விளைவான்
கிழக்காலே சென்று சோர்வான்
விழித்திரு மனிதா!
உலகம் ஒரு நிமிடம்
சுற்றாமல் போனாலும்
மறு பாதை வலம்வரும்
பகலிரவு மறைந்து போகும்
விழித்திரு மனிதா!
பணம் பார்ப்பவன்
பணத்தில் புரள்வான்
பணத்தில் புரண்டவர்
பிணமாகி திகழ்வர்
விழித்திரு மனிதா!
எதிரிகள் இமயத்தில் நிற்பர்
உறவுகள் பணத்தினில் நிற்பர்
உனை விழுத்திட நினைப்பர்
விழித்திரு மனிதா!
இன்பங்கள் துன்பமாகும்
துன்பங்கள் இன்பமாகும்
சேர்த்தவர் துக்கத்தில்
இல்லாதோர் இன்பத்தில்
விழித்திரு மனிதா!
பணம் பொருள் சேர்ந்துவிட்டால்
காட்டு நரி கூட நாட்டை தின்னும்
விழித்திரு மனிதா!
மேல்வர்க்கம் பந்தாடும்
கீழ்வர்க்கம் விலகியோடும்
மறையும் ஓர் நாள் அவ்வர்க்கம்
விழித்திரு மனிதா!
நாளையும் நம் கையில்
நம்பிக்கை நிச்சயம்
அதுவே நாம் கொண்ட லட்சியம்...
விழித்திரு மனிதா!
2008-02-26
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக