சுதந்திரமில்லா துப்பாக்கியாய்...!
வையத்தில் ஆயிரம் நினைவுகள் சுமக்க
நாங்கள் வலம் வருகிறோம்
நினைத்து கொள்கின்ற
அந்த நினைவுகள்
தோள்கள் சுமக்க திரிகிறோம்...
எங்களின் நினைவுகளும் கதைகளும்
உயிர் கைகளும் தோள்களும்
சுமக்கும் வரைதான்...
ஆணொன்று பெண்ணொன்று புணராது
கைகளுடன் முத்தமிட்ட படியேதான்
தோள்களில் தொங்கி உலாவருகிறோம்.
மாங்கல்யம் காணாத மலடுகள் தானா
என்றெண்ணும் போது ஆயிரம் எதிரிகள்
உயிர் குடித்திறக்க வேண்டுமென்ற
நினைவுகள் எங்களுடனே கூடப்பிறந்தது.
எங்களினம் எமக்கே தூதுபோகும்
தான்னென்ணும் தருணத்தில் தன்னையும்
தனக்கு பிடித்தவற்றையும் மாய்த்துக்கொல்லும்.
ஆயிரம் கடல் தாண்டி உளவுக்கண் தாண்டி
உலகெல்லாம் போராடப்போகிறோம்.
எம்மினம் தரையிறங்கினால்
தாலாட்டென்ன ஒப்பாரிதான்
மிகவும் பிடித்து போயிற்று.
எங்கள் இருப்பிடமோ வெகுசிறப்பிடம்
இரும்புகவசங்கள் தான் எங்கள் வசிப்பிடம்
எங்கள் இருப்பிடம் எங்களினம் தவிர
எதிரிகள் எவரும் சுலபத்தில்
தீர்த்து கட்டமுடியாது.
கண்ணில்லை கைகளில்லை கால்களில்லை
எங்களால் என்னதான் பண்ணமுடியும்
என்றெண்ணும் போது - மனித
இயந்திரங்களை மயக்கி விடுகிறோம்.
மனித இயந்திரங்கள் எம்மீது
பளிபோடும் போதெல்லாம் - அவர்
உயிர் எடுப்பதே எமது சுவாசம்.
ஆயிரம் வகைதான் வலம்வந்தோம்
வையத்தில் அது போதும்
ஆறாத இன்பமதுவே நாம் கொண்டோம்.
மனித இயந்திரங்களின்
விடுதலை போராட்டத்தில்
நம் இனம் கோடிகளை தாண்டி
நொறுங்கி எரிந்து மரித்ததுதான்
மனதில் என்றும் ஆறாத்துயரங்களின்
பதிவுகளாகின...
நாம் கொண்ட கோபம் தீர்க்க
எங்களுக்குள் பளிதீர்த்த சரித்திரமே
சுவடுகள் கூட சொல்லியதில்லை.
மனித உயிர் வாங்கி அவர்
குருதி குடிப்பதுவே நாம்
கொண்ட கோபத்தின் தாகம்.
தூங்கும் போதெல்லாம் எழுப்பப்படுவோம்
தீச்சுவாலை பறக்க
எங்கள் கண்கள் விடியும்...
குற்றவாளி சுற்றவாளி என்று
யாவரும் நம் குறிக்குள்
அடக்கப்படுவதே நம்மின துணிவு.
உலகில் ஜரோப்பிய தேசமே
எங்களினத்தின் விடுதலை வேங்கைகள்
அங்கு நாம் சுதந்திரம் அடைந்து கிடக்கிறோம்...
இலங்கை, பாக்கிஸ்தான் போன்ற
தெற்காசிய தேசங்களே - எங்களை
தீவிரவாதிகளாக்கி கொண்டிருக்கும் தீவிரவாதிகள்
அங்கேதான் சுதந்திரமில்லா
துப்பாக்கிகளாய் நொந்து வாழ்கிறோம்...
2008-02-26
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக