2010-05-08

திசைகளும், பருவமும்

திசைகளும், பருவமும்

காலையில்
சூரியன் கண்வழித்து
எழுந்து நின்ற உன் உடல்
பின் முதுகு மேற்கிருந்த
அழுத்தம்,

வடக்கே உடல் தாங்கும்
வாடைக்காற்றும்
தெற்கே உடல் பெயரும்
சோழக் காற்றும்,

அன்று! அம்மா நிலாச்
சோறுட்டியதும்
தென்றலின் வழியில்
திசைகள் தெரிவித்ததும்
இன்றும் ஞாபகப்படுத்தும்.

இன்றும் திசைகள் அறிய…
பெயரில்லாப் புயல்களும்
சூறாவளி போல் என்னை
அடித்துச் செல்ல
மீண்டெழுந்து திசைகள்
நோக்கிய போதும்
வாடைக்கும், கச்சானுக்கும்
என் உடல் வளைந்து
மீண்ட போதும்
என் கையில் இல்லை
திசையறிகருவி.

இன்றைக்கும் நினைவுக்கு வரும்
தெற்கும், மேற்கும்
மேலாக தழுவிச் சென்ற
கத்ரீனா! வில்மா!
நாளைக்கு பருவங்கள் மாறலாம்
திசைகளும் மாறலாம்...

மௌனம்

மௌனம்



பார்த்த நாள் முதலாய்
உன் நினைவுகள்,
மீண்டும் மீண்டும்
மௌனமாய்
மௌனங்களும்
மரணிக்கும்
அந்த நிமிடங்களும்
செத்துப்போய்
உயிர்க்கத் தொடங்கிய
உன்னுள் கிடந்து
மௌனமொழி

இளைஞனே!


முன்னேற வேண்டுமா
முயற்சியை நம்பு,
பிழைக்க வெண்டுமா
உழைப்பை நம்பு,
விதியை வெல்ல வேண்டுமா
மதியை நம்பு,
வாழ்க்கையில்
வெல்ல வேண்டுமா
நல்ல பெண்ணை நம்பு

.

காதலில்

காதலில்

நெஞ்சை மறந்து விடு
என் உயிரைக்கொடுத்து விடு

நட்பினை மறந்து
காதலைத் தொடர்ந்து
அன்பினில் தவழும்
உயிரினை உரசிவிடு

இதயத்தை கிழித்து
இமைகளை வருத்தி
கண்களில் உதிரும்
கண்ணீரை துடைத்தவிடு

கனவுகள் பிறந்து
நினைவுகள் தொடர்ந்து
நெஞ்சினில் உடையும்
இதயத்தை நிலைக்கவிடு

என்னை மறந்து விடு
என் உயிரைக்கொடுத்து விடு

2010-03-30

கடவுளின் படைப்பு!

கடவுளின் படைப்பு!

பெண்ணைப் படைத்த கடவுளே
என்மேல் என்ன மோகமோ
நானும் உன்னை வணங்கும் போது
நீயா எனக்கு வரமொன்று தந்தாய்

கண்கட்டி காதலிக்க வைத்தாய்
ஆணிண் கண்ணை மூடிப்போட்டாயோ
அவனை நினைத்து உயிரை இழந்து
தவிக்கிறேன் காதலின் வலியால்

கலர்கலராய் கனவுகள் தந்தாய்
காதலில் கறுப்பு வெள்ளை கனவுகளோ
கண்களை நினைத்து கனவை இழந்து
தவிக்கிறேன் கடவுளின் படைப்பால்

நேற்று இன்று நாளை என்று
காதலனைத் தேடுகின்றேன்
நீயாய் என் முன் வந்து நின்றால்
நானும் உன்னை முத்தமிடுவேன்

உனக்கும் இல்லை உறக்கம்
அதிலும் இல்லை இரக்கம்
பெண்ணைப் படைத்த கடவுளே
என் மேல் என்ன மோகமோ

2008-02-26

தாயே! மறுவாழ்வு என்னுடன்...

தாய்தந்தை பெற்ற இன்பத்தில் - நான்
பிறந்தேன் இவ்வையத்தில்
நாய்பாடாய் நானலைந்து
துன்பப்படவோ தாயே!


காலத்தில் கூட
கால்கள் நீரில் தயங்கியும் மிதியாது
கண்கலங்கி சிந்துவதேனோ தாயே!


உலகத்தை உள்ளங்கை வைத்து
வையம் பெறும் பாடம்
என் விரல் நுனிகூட வராதோ தாயே!


கூடி பிறந்ததெல்லாம்
எனக்கு பகையானால் - என்
பகை தீர்க்காயோ தாயே!


எதிரிகள் வேளம்போல் மதங்கொண்டு
என்முகம் தேடியலைவர் - அவர்
திருந்த வழிசமைப்பாயோ தாயே!


சொந்த காலில் நின்று வேலைசெய்ய
வஞ்சக செட்டிகள் வாய்க்குள் காலாட்டி
வஞ்சிக்கும் வேதனைகள்
களையாயோ தாயே!


ஏழைக்கு இரங்கும் இந்த
ஏழையின் நிலைதனை புரியாமல்
தோற்கடிக்கும் அசுர முகங்கள்
அளிப்பாயோ தாயே!


நன்றி கெட்ட உலகில்
நண்பர் எல்லாம் நரிகளாக
மாறுவதேனோ தாயே!


பண்ணாத குறும்பெல்லாம் பண்ணியதென்று
பழிசுமத்த தடுத்து நிறுத்தாயோ தாயே!


பொல்லாத குற்றமெல்லாம்
நான் புரிந்தது என்று
பஞ்சாயத்தில் பொய்யுரைப்பர்
கை கோடுப்பாயோ தாயே!


என் குற்றமில்லா வழக்கெல்லாம்
வாதாடி வெல்ல லஞ்சத்தின் வஞ்சகனை
லகரத்தில் நிலைநிறுத்தும் லஞ்சகனை
ஒளிக்காயோ தாயே!


தேவாரம் சொல்லியென்
மரமண்டைக்கு ஏறாமல் போக
தண்டனைகள் ஏனோ தாயே!


இறைவன் உறைவிடத்தில்
விளக்கேற்றி தலைவாசல் வர
இழிசாதியென்று மேல்சாதி வதைக்கும்
முகம் கொடுப்பாயோ தாயே!


சுற்றம் இன்பத்தில் நிலைத்திட
என்மனம் மகிழ்ச்சியில் திளைத்திட
நல் மனையாளை அமையாயோ தாயே!


இல்லறத்தில் நல்லறமாய்
மறு வீட்டு மனிதர்கள் நின்
மனையாள் நயப்படைக்கும்
வஞ்சனைகள் தீர்க்காயோ தாயே!


இன்பத்தில் இறைவனாய்
இனிமையில் குடும்பமாய்
எளிமையில் ஏழையாய்
இரக்கத்தில் சகலராய்
அறிவுக்கு அப்பாவாய்
ஆசைக்கு அம்மாவாய்
என் இருள் நீக்கி ஒளி பெருக
தாயே!
உனை வரம் கேட்கிறேன்
என் தாயாக மறுவாழ்வும் மலர்ந்திட...