தாயே! மறுவாழ்வு என்னுடன்...
தாய்தந்தை பெற்ற இன்பத்தில் - நான்
பிறந்தேன் இவ்வையத்தில்
நாய்பாடாய் நானலைந்து
துன்பப்படவோ தாயே!
காலத்தில் கூட
கால்கள் நீரில் தயங்கியும் மிதியாது
கண்கலங்கி சிந்துவதேனோ தாயே!
உலகத்தை உள்ளங்கை வைத்து
வையம் பெறும் பாடம்
என் விரல் நுனிகூட வராதோ தாயே!
கூடி பிறந்ததெல்லாம்
எனக்கு பகையானால் - என்
பகை தீர்க்காயோ தாயே!
எதிரிகள் வேளம்போல் மதங்கொண்டு
என்முகம் தேடியலைவர் - அவர்
திருந்த வழிசமைப்பாயோ தாயே!
சொந்த காலில் நின்று வேலைசெய்ய
வஞ்சக செட்டிகள் வாய்க்குள் காலாட்டி
வஞ்சிக்கும் வேதனைகள்
களையாயோ தாயே!
ஏழைக்கு இரங்கும் இந்த
ஏழையின் நிலைதனை புரியாமல்
தோற்கடிக்கும் அசுர முகங்கள்
அளிப்பாயோ தாயே!
நன்றி கெட்ட உலகில்
நண்பர் எல்லாம் நரிகளாக
மாறுவதேனோ தாயே!
பண்ணாத குறும்பெல்லாம் பண்ணியதென்று
பழிசுமத்த தடுத்து நிறுத்தாயோ தாயே!
பொல்லாத குற்றமெல்லாம்
நான் புரிந்தது என்று
பஞ்சாயத்தில் பொய்யுரைப்பர்
கை கோடுப்பாயோ தாயே!
என் குற்றமில்லா வழக்கெல்லாம்
வாதாடி வெல்ல லஞ்சத்தின் வஞ்சகனை
லகரத்தில் நிலைநிறுத்தும் லஞ்சகனை
ஒளிக்காயோ தாயே!
தேவாரம் சொல்லியென்
மரமண்டைக்கு ஏறாமல் போக
தண்டனைகள் ஏனோ தாயே!
இறைவன் உறைவிடத்தில்
விளக்கேற்றி தலைவாசல் வர
இழிசாதியென்று மேல்சாதி வதைக்கும்
முகம் கொடுப்பாயோ தாயே!
சுற்றம் இன்பத்தில் நிலைத்திட
என்மனம் மகிழ்ச்சியில் திளைத்திட
நல் மனையாளை அமையாயோ தாயே!
இல்லறத்தில் நல்லறமாய்
மறு வீட்டு மனிதர்கள் நின்
மனையாள் நயப்படைக்கும்
வஞ்சனைகள் தீர்க்காயோ தாயே!
இன்பத்தில் இறைவனாய்
இனிமையில் குடும்பமாய்
எளிமையில் ஏழையாய்
இரக்கத்தில் சகலராய்
அறிவுக்கு அப்பாவாய்
ஆசைக்கு அம்மாவாய்
என் இருள் நீக்கி ஒளி பெருக
தாயே!
உனை வரம் கேட்கிறேன்
என் தாயாக மறுவாழ்வும் மலர்ந்திட...
2008-02-26
சுதந்திரமில்லா துப்பாக்கியாய்...!
வையத்தில் ஆயிரம் நினைவுகள் சுமக்க
நாங்கள் வலம் வருகிறோம்
நினைத்து கொள்கின்ற
அந்த நினைவுகள்
தோள்கள் சுமக்க திரிகிறோம்...
எங்களின் நினைவுகளும் கதைகளும்
உயிர் கைகளும் தோள்களும்
சுமக்கும் வரைதான்...
ஆணொன்று பெண்ணொன்று புணராது
கைகளுடன் முத்தமிட்ட படியேதான்
தோள்களில் தொங்கி உலாவருகிறோம்.
மாங்கல்யம் காணாத மலடுகள் தானா
என்றெண்ணும் போது ஆயிரம் எதிரிகள்
உயிர் குடித்திறக்க வேண்டுமென்ற
நினைவுகள் எங்களுடனே கூடப்பிறந்தது.
எங்களினம் எமக்கே தூதுபோகும்
தான்னென்ணும் தருணத்தில் தன்னையும்
தனக்கு பிடித்தவற்றையும் மாய்த்துக்கொல்லும்.
ஆயிரம் கடல் தாண்டி உளவுக்கண் தாண்டி
உலகெல்லாம் போராடப்போகிறோம்.
எம்மினம் தரையிறங்கினால்
தாலாட்டென்ன ஒப்பாரிதான்
மிகவும் பிடித்து போயிற்று.
எங்கள் இருப்பிடமோ வெகுசிறப்பிடம்
இரும்புகவசங்கள் தான் எங்கள் வசிப்பிடம்
எங்கள் இருப்பிடம் எங்களினம் தவிர
எதிரிகள் எவரும் சுலபத்தில்
தீர்த்து கட்டமுடியாது.
கண்ணில்லை கைகளில்லை கால்களில்லை
எங்களால் என்னதான் பண்ணமுடியும்
என்றெண்ணும் போது - மனித
இயந்திரங்களை மயக்கி விடுகிறோம்.
மனித இயந்திரங்கள் எம்மீது
பளிபோடும் போதெல்லாம் - அவர்
உயிர் எடுப்பதே எமது சுவாசம்.
ஆயிரம் வகைதான் வலம்வந்தோம்
வையத்தில் அது போதும்
ஆறாத இன்பமதுவே நாம் கொண்டோம்.
மனித இயந்திரங்களின்
விடுதலை போராட்டத்தில்
நம் இனம் கோடிகளை தாண்டி
நொறுங்கி எரிந்து மரித்ததுதான்
மனதில் என்றும் ஆறாத்துயரங்களின்
பதிவுகளாகின...
நாம் கொண்ட கோபம் தீர்க்க
எங்களுக்குள் பளிதீர்த்த சரித்திரமே
சுவடுகள் கூட சொல்லியதில்லை.
மனித உயிர் வாங்கி அவர்
குருதி குடிப்பதுவே நாம்
கொண்ட கோபத்தின் தாகம்.
தூங்கும் போதெல்லாம் எழுப்பப்படுவோம்
தீச்சுவாலை பறக்க
எங்கள் கண்கள் விடியும்...
குற்றவாளி சுற்றவாளி என்று
யாவரும் நம் குறிக்குள்
அடக்கப்படுவதே நம்மின துணிவு.
உலகில் ஜரோப்பிய தேசமே
எங்களினத்தின் விடுதலை வேங்கைகள்
அங்கு நாம் சுதந்திரம் அடைந்து கிடக்கிறோம்...
இலங்கை, பாக்கிஸ்தான் போன்ற
தெற்காசிய தேசங்களே - எங்களை
தீவிரவாதிகளாக்கி கொண்டிருக்கும் தீவிரவாதிகள்
அங்கேதான் சுதந்திரமில்லா
துப்பாக்கிகளாய் நொந்து வாழ்கிறோம்...
புனைவர் அகவி நேரம் 7:15 AM 0 அபிப்பிராயம்
விழித்திரு மனிதா...!
செந்தணல் வீதியிலே
வெட்ட வெளியிலே
விட்ட வெளியில்
நொந்து நொந்து சாகும்
இந்த கொள்ளிகட்டை!
மனிதா நாளையும்
இரவு பகலாகலாம் பகல் இரவாகலாம்
மேற்கினில் பரிதி விளைவான்
கிழக்காலே சென்று சோர்வான்
விழித்திரு மனிதா!
உலகம் ஒரு நிமிடம்
சுற்றாமல் போனாலும்
மறு பாதை வலம்வரும்
பகலிரவு மறைந்து போகும்
விழித்திரு மனிதா!
பணம் பார்ப்பவன்
பணத்தில் புரள்வான்
பணத்தில் புரண்டவர்
பிணமாகி திகழ்வர்
விழித்திரு மனிதா!
எதிரிகள் இமயத்தில் நிற்பர்
உறவுகள் பணத்தினில் நிற்பர்
உனை விழுத்திட நினைப்பர்
விழித்திரு மனிதா!
இன்பங்கள் துன்பமாகும்
துன்பங்கள் இன்பமாகும்
சேர்த்தவர் துக்கத்தில்
இல்லாதோர் இன்பத்தில்
விழித்திரு மனிதா!
பணம் பொருள் சேர்ந்துவிட்டால்
காட்டு நரி கூட நாட்டை தின்னும்
விழித்திரு மனிதா!
மேல்வர்க்கம் பந்தாடும்
கீழ்வர்க்கம் விலகியோடும்
மறையும் ஓர் நாள் அவ்வர்க்கம்
விழித்திரு மனிதா!
நாளையும் நம் கையில்
நம்பிக்கை நிச்சயம்
அதுவே நாம் கொண்ட லட்சியம்...
விழித்திரு மனிதா!
புனைவர் அகவி நேரம் 7:12 AM 0 அபிப்பிராயம்
வஞ்சகம்
வஞ்சகம்
முன்னோர் உயிர் பிரிந்து...
தொலைவிலிருக்கும் என் இதயம்
துன்புறும் என்று எண்ணியதில்லை
என் உடல் தனியே
உயிரை உன்னிடம் கொடுத்து
உருகிய வாழ்க்கை
விழிகளில் கசிந்து
முள்ளின் மீது நடக்கிறேன்...
கண்ணாடி இதயத்தில்
கல் வீசிபார்க்காதே...!
நொறுங்குவது என் உடலல்ல - உன்
உயிர் மனம் நொந்து போகமல்
மடி சோர்ந்து போகமல்
உன் உயிர் கொன்று தின்கிறாய்...
நாடி நாளமென்
குருதி விளையும் குழல்கள் கூட
உன் காதல் சொல்லி உலாவரும்
கலங்கரை போல் உன் காதல் ஒளிராதா...?
புற்றீசல் பறந்தெல்லாம் இறந்த பின்
வரும் ராஜாவின் காதல் காரமாகிற்றோ
கடைக்கண்ணில் நின்று
வெண்ணிலா விழி சமைத்து பாரு
நெஞ்சில் வஞ்சகம் வைத்து
வேசியாகிவிடாதே....
புனைவர் அகவி நேரம் 7:09 AM 0 அபிப்பிராயம்