2007-03-08

வீணடிக்கப்படும்




வீணடிக்கப்படும்...

புதியதோர் உலகம் புகுவோம்
முடியுமா? பாதைகள் பளிங்காகுமா?
உண்மைதான் ஆராச்சிகள்
தடம்புரளவில்லை தொடர்கின்றன...
அந்த வெண்ணிலவோடு
நிறுத்தப்படவுமில்லை...
அதுவும் நடக்கும்!
இடி மின்னல் புயலென ஜம்பூதங்களும்
அவற்ரோடு அவதரித்துலாவி
உயிர் கொண்டுபோகும்...
அதுவும் நடக்கும்!
ஆங்காங்கே
ஆயுதங்கள் வாங்கி
கல்லறை பூமியை
கந்தக பூமியாக்கிப்போவர்...
அதுவும் நடக்கும்!
ஆளில்லா பறவையெல்லாம்
ஆரவாரம் போட்டு வேவுபார்க்கும்
ஆலமரத்தோரமொதுங்கும்
உயிரெல்லாம் கதறியளும்...
உறுமியவன் உயிர்கொண்டு போவான்...
மனிதங்களின் அவலங்கள்
காற்றடைத்த பலூன்கள்!
கதறியவன் குரல் ஏகி
அந்தி அஸ்தமனமாகி
அதிகாலை புலரும்வரை ஆரவாரிக்கும்
காலைபுலர்ந்தால் போதும்
அப்பாவி குடிசை முகட்டின் கீழ்
வெள்ளை விரிப்புக்கள்...
சோகத்தில் உறவாடும் உதிரங்கள்
ஊர் கூடி ஒப்பாரிவைக்கும்
கண்ணீரும் கம்பலையுமாக
குடிலருகுக் குடிசைகள்...
மலர்களால் மலர்த்தப்பட்டு
கிடக்கும் குடிசையறை
முனங்கலும் அழுகையும்
வெற்றுடல் உள்ளிருப்பதை
சைகை காட்டும்... - ம்...
பாடைகட்டி படுக்கையில்
கைகளும் கால்களும்
அவிழ்க்கப்படாமல் அணியப்பட்ட
வெள்ளைத்துணி முடிச்சுக்கள்...
தைலைவணங்கி நெளிந்தொடி
செத்துப்போகும் பத்தியின் ஆவிகள்
காலடிவணங்கி ஒளியேற்றி
ஆடிக்கிடக்கும் குத்துவிளக்கு
அதுமுன்னே பொட்டிளந்தவள்
கண்ணீர் கோலங்கள்
ஆயுதக் கொல்லர்கள் இருக்கும்வரை
அதுவம் நடக்கும்!
மனிதனை மனிதன்
அடித்துக்கொல்லும் பாசுரத்தை
தமிழீழ இதிகாசம் சும்மா விடாது
அகிம்சைப்போராளிகள்
அடங்கும் வரை
ஆயுதப்போராளிகள் அலைக்களிப்பர்...
அவரோடொத்துறவாடும் போரரக்கர்கள்.
நீ எங்கிருந்து வந்தாய்
எதற்காக வந்தாய்
வந்த இடம் பிரியாது
உன்னுறவோடு விளையாடும்
உன் நண்பர்கள் அழுகிறார்கள்
அது உனக்கு கேட்கும்
அதுவும் உனக்கு பிரியாது!
கட்டம் கட்டமாய்
கண்டதுண்டமாக்கியவர்கள்
அறிவர் நாமெல்லாம் யாரென்று...
விசாரணைகள் நடக்கும்
அதுவும்
உடலோடு துப்பாக்கிரவைகளும்
கொள்ளிக்கட்டைகளும்
நீதியின் இருக்கைக்கான பதில்கள்
அதுவும் இனாமாகக்கிடைக்கும்...
மஞ்சல் கயிறு முடிச்சவிழ்த்து
மாஞ்சி (விலங்கு) பூட்டுக்களாகும்
விவகாரத்தில்லாமல்
விவகாரத்துக்கள் விதவை பட்டம்
வீணடிக்கப்படும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக