காதல் சொல்வாயா?
பூமிக்குள் வாழும் வானங்கள்
அழகான மின்னலோவியம்
இணையற்ற இசை பாடும்
தூறலாய் வந்து பூமி நனைப்பாய்
உனக்கான என் காதல் சொல்வாயா?
காவெனக்கரையும் காகங்கள்
உன்னிடம் இரை தேடிவரும்
உமிழும் எச்சில் சுவைக்காக
உன் பாசம் புரியாமல் தவிக்கும்
உனக்கான என் காதல் சொல்வாயா?
ஊர் பேசும் உற்றார் பேசும்
சுட்டபின் சுடுமென்று பலர் பேச்சும்
புனிதமான வார்த்தைகள் புரியாது
உன் புனிதம் புரியாது அவர்களுக்கு
உனக்கான என் காதல் சொல்வாயா?
பாடிப்பாடி திரியும் பறவைகள்
காதலில் ஜோடிகட்டித்திரியும்
அந்தியுறையும் விருட்சம் நடுவே
விளையாடித்திரியும் அடிமனதை வருடும்
உனக்கான என் காதல் சொல்வாயா?
காற்றுவாங்கும் கரையோரம்
நண்டுகள் போடும் நளினக்கிறுக்கல்கள்
அலைகள் அதை அசிங்கமாக்கி போகும்
தென்றலும் மௌனமாய் வார்த்தை சொல்லும்
உனக்கான என் காதல் சொல்வாயா?
மின்மினிகள் பரிவாரம் சூழ
தனிமையிலே முழுமதியாய் தவிக்கும்
பகலுக்காய் அர்த்தங்கொள்ளும்
பகலவுனும் கனவொளித்துப்போவான்
உனக்கான என் காதல் சொல்வாயா?
வானத்தின் வண்ணமெடுத்து
காதலுக்காய் வடித்தகவிதைகள்
வெள்ளைக்காகிததில் வெறுமையாய்
பகல் கனவாகிப் போனதாய்!
உனக்கான என் காதல் சொல்வாயா?
வண்ணத்துப்பூச்சிகள் வசைபாடும்
வண்ணப்பூங்காவில் மலர்கள்
அந்நிய வருகைக்காய் மலரப்பட்டு
புதுத்தெம்புடன் பூத்துக்குலுங்கும்
உனக்கான என் காதல் சொல்வாயா?