2007-05-27

முகவரிகள்

முகவரிகள்

நினைவுகள் சுமந்த
என் முகவரிகள்
ஒவ்வொன்றும்அழுகின்றன.
ஆத்தங்கரையோரம்
அளவளாவித்திரிந்த காலங்கள்
ஆற்றுக்குள் மூழ்கடிக்கப்பட்டு
கப்பலேறி இக்கரைக்கு அக்கரை
பச்சை என்று
மூட்டைகளைச் சுமந்து செல்கிறது
கடல்மேல் தள்ளாடி தள்ளாடி...
கடலலையைப் போலவே
வாழ்க்கையும் ஆடிச்செல்கிறது...
அது என்ன உலா...?
கிராமத்து வேதனைகள் புரியவைத்த
அந்தக்கடல் பயணம்
கடற்கரையில் அளவளாவ விட்டிருக்கிறது.
அந்த சுகங்கள் எதிலுமில்லை
வாழ்க்கை சுமையை எட்டுவும் இல்லை.
நகரத்து வாழ்க்கையது
நரகத்து வாழ்க்கையானதுதான் மிச்சம்.
சுகங்கள் குறைக்கப்பட்டு
சுமைகள் அடுக்கப்படும் வாழ்க்கை
போரால் சிதைந்த என்கிராமத்து
முகவரிகளின் வரிகள் கூட
காற்றுடன் கலக்காமல் மறைந்து விட்டதுதான்
இடி விழுந்தாற்போல் கவலை.
சுதந்திரமாய் திரிந்த என் வாழ்க்கையை
சுக்குநூறாக்கியதும் அந்த கொடிய யுத்தமே.
நிழல்களில் நியமாக வாழ்கிறேன்...!
மறு கணமே புதிய முகவரிகள்
செதுக்குவதற்கு என்னூர்கருங்கற்களை
தேடுவதாக இல்லைமனமுடைந்த திருப்பம்
சீ... என்று போன வாழ்க்கையில்
பூவை மனம் பார்க்காத
என் பிஞ்சு உள்ளம்
நகரத்து நரக வாழ்க்கையில்
மோகினியிடம் மாட்டிக்கொண்டு காதல்
வளர்த்த காலத்திலும் இன்பம் இனிக்கவில்லை.
கிராமத்தை கடந்த என் உள்ளம் நகரத்தில் நரகமாக்கி
தொடர்கின்ற வாழ்க்கை பயணங்கள் முடிவதற்கிடமில்லை
கிராம நகரமெல்லாம் கடக்கவைத்து
இறுதியில் இலவம் பஞ்சுபோல் தாய்நாட்டையே கடக்கவைத்துவிட்டதுகொடிய இனவாதப்போர்...

2007-03-08

காதல் சொல்வாயா?



காதல் சொல்வாயா?

பூமிக்குள் வாழும் வானங்கள்
அழகான மின்னலோவியம்
இணையற்ற இசை பாடும்
தூறலாய் வந்து பூமி நனைப்பாய்
உனக்கான என் காதல் சொல்வாயா?

காவெனக்கரையும் காகங்கள்
உன்னிடம் இரை தேடிவரும்
உமிழும் எச்சில் சுவைக்காக
உன் பாசம் புரியாமல் தவிக்கும்
உனக்கான என் காதல் சொல்வாயா?

ஊர் பேசும் உற்றார் பேசும்
சுட்டபின் சுடுமென்று பலர் பேச்சும்
புனிதமான வார்த்தைகள் புரியாது
உன் புனிதம் புரியாது அவர்களுக்கு
உனக்கான என் காதல் சொல்வாயா?

பாடிப்பாடி திரியும் பறவைகள்
காதலில் ஜோடிகட்டித்திரியும்
அந்தியுறையும் விருட்சம் நடுவே
விளையாடித்திரியும் அடிமனதை வருடும்
உனக்கான என் காதல் சொல்வாயா?

காற்றுவாங்கும் கரையோரம்
நண்டுகள் போடும் நளினக்கிறுக்கல்கள்
அலைகள் அதை அசிங்கமாக்கி போகும்
தென்றலும் மௌனமாய் வார்த்தை சொல்லும்
உனக்கான என் காதல் சொல்வாயா?

மின்மினிகள் பரிவாரம் சூழ
தனிமையிலே முழுமதியாய் தவிக்கும்
பகலுக்காய் அர்த்தங்கொள்ளும்
பகலவுனும் கனவொளித்துப்போவான்
உனக்கான என் காதல் சொல்வாயா?

வானத்தின் வண்ணமெடுத்து
காதலுக்காய் வடித்தகவிதைகள்
வெள்ளைக்காகிததில் வெறுமையாய்
பகல் கனவாகிப் போனதாய்!
உனக்கான என் காதல் சொல்வாயா?

வண்ணத்துப்பூச்சிகள் வசைபாடும்
வண்ணப்பூங்காவில் மலர்கள்
அந்நிய வருகைக்காய் மலரப்பட்டு
புதுத்தெம்புடன் பூத்துக்குலுங்கும்
உனக்கான என் காதல் சொல்வாயா?

தணிக்கை



தணிக்கை

சூரியன் செந்தீயில் வெந்தெழுவான்
பிரசாரங்கள் புளுதிகலைக்கும்
பறவைகள் பிரசாரங்கள் புரியாது!
அரசியலுக்காயிருக்காது...
அக்குவேறு ஆணிவேறாக
பாலிலிட்ட நீரை மீட்கும்
அன்னபட்சி
துப்பாக்கியில் தோட்டாக்களை
வேறாக்காது விலக்கு!
வடகிழக்கிலிருந்து கடத்தபடும்
வெண்புறாக்கள் வேறிடங்களில்
குருதிகொடுக்கின்றன...
இருவுகள் சுவாசம் தொலைக்கும்
பகலோடு விளையாட
இதயங்கள் துடிக்கும்
விடிந்தால் படபடவென பயப்பிடும்...
சுதந்திரத்தின் குரல்வளைகள்
நசுக்கப்பட்டு சுவாசம் மூச்சுமுட்டும்
வாடகைக்கும் வாங்கமுடியாமல்
அவசரகாலச்சட்டங்கள்
அத்துமீறி ஆளைக்கொல்லுகின்றது.
உரிமைகள் எல்லாம் வாடகைக்கு
வட்டி வாங்கிக்கொண்டிருக்கிறது.
முதலாளி வர்க்கம்
மூச்சுமுட்ட ருசிச்சு கொல்கிறது
பணக்காரன் ஏழை என்ற
வாதப்பிரதிவாதங்கள்
மனிதங்கள் புரிந்தால் - ஏது
இனமதக்கலவரங்கள்...
தணிக்கையும் தணிக்கப்பட்டு...

வீணடிக்கப்படும்




வீணடிக்கப்படும்...

புதியதோர் உலகம் புகுவோம்
முடியுமா? பாதைகள் பளிங்காகுமா?
உண்மைதான் ஆராச்சிகள்
தடம்புரளவில்லை தொடர்கின்றன...
அந்த வெண்ணிலவோடு
நிறுத்தப்படவுமில்லை...
அதுவும் நடக்கும்!
இடி மின்னல் புயலென ஜம்பூதங்களும்
அவற்ரோடு அவதரித்துலாவி
உயிர் கொண்டுபோகும்...
அதுவும் நடக்கும்!
ஆங்காங்கே
ஆயுதங்கள் வாங்கி
கல்லறை பூமியை
கந்தக பூமியாக்கிப்போவர்...
அதுவும் நடக்கும்!
ஆளில்லா பறவையெல்லாம்
ஆரவாரம் போட்டு வேவுபார்க்கும்
ஆலமரத்தோரமொதுங்கும்
உயிரெல்லாம் கதறியளும்...
உறுமியவன் உயிர்கொண்டு போவான்...
மனிதங்களின் அவலங்கள்
காற்றடைத்த பலூன்கள்!
கதறியவன் குரல் ஏகி
அந்தி அஸ்தமனமாகி
அதிகாலை புலரும்வரை ஆரவாரிக்கும்
காலைபுலர்ந்தால் போதும்
அப்பாவி குடிசை முகட்டின் கீழ்
வெள்ளை விரிப்புக்கள்...
சோகத்தில் உறவாடும் உதிரங்கள்
ஊர் கூடி ஒப்பாரிவைக்கும்
கண்ணீரும் கம்பலையுமாக
குடிலருகுக் குடிசைகள்...
மலர்களால் மலர்த்தப்பட்டு
கிடக்கும் குடிசையறை
முனங்கலும் அழுகையும்
வெற்றுடல் உள்ளிருப்பதை
சைகை காட்டும்... - ம்...
பாடைகட்டி படுக்கையில்
கைகளும் கால்களும்
அவிழ்க்கப்படாமல் அணியப்பட்ட
வெள்ளைத்துணி முடிச்சுக்கள்...
தைலைவணங்கி நெளிந்தொடி
செத்துப்போகும் பத்தியின் ஆவிகள்
காலடிவணங்கி ஒளியேற்றி
ஆடிக்கிடக்கும் குத்துவிளக்கு
அதுமுன்னே பொட்டிளந்தவள்
கண்ணீர் கோலங்கள்
ஆயுதக் கொல்லர்கள் இருக்கும்வரை
அதுவம் நடக்கும்!
மனிதனை மனிதன்
அடித்துக்கொல்லும் பாசுரத்தை
தமிழீழ இதிகாசம் சும்மா விடாது
அகிம்சைப்போராளிகள்
அடங்கும் வரை
ஆயுதப்போராளிகள் அலைக்களிப்பர்...
அவரோடொத்துறவாடும் போரரக்கர்கள்.
நீ எங்கிருந்து வந்தாய்
எதற்காக வந்தாய்
வந்த இடம் பிரியாது
உன்னுறவோடு விளையாடும்
உன் நண்பர்கள் அழுகிறார்கள்
அது உனக்கு கேட்கும்
அதுவும் உனக்கு பிரியாது!
கட்டம் கட்டமாய்
கண்டதுண்டமாக்கியவர்கள்
அறிவர் நாமெல்லாம் யாரென்று...
விசாரணைகள் நடக்கும்
அதுவும்
உடலோடு துப்பாக்கிரவைகளும்
கொள்ளிக்கட்டைகளும்
நீதியின் இருக்கைக்கான பதில்கள்
அதுவும் இனாமாகக்கிடைக்கும்...
மஞ்சல் கயிறு முடிச்சவிழ்த்து
மாஞ்சி (விலங்கு) பூட்டுக்களாகும்
விவகாரத்தில்லாமல்
விவகாரத்துக்கள் விதவை பட்டம்
வீணடிக்கப்படும்...

2007-03-03

தசாவதாரத்துடன் கூடவொன்று


தசாவதாரத்துடன் கூடவொன்று

ஆயிரம் காலத்து பயிர்
கபடிகூட வளர்க்கப்படவேண்டியதுதான்
அதிலும் கிட்டிப்புள்ளும்
அங்கவினமாகிக்கொண்டு
இதுபோலவெ அதுவும்
மெருகூட்டி வண்ணமிட்டுக்கிடக்கின்றது

தமிழன் தனித்துவம்
வெள்ளைத்தோல் திருடிக்கொண்டது
யாரும் அறியோம் அதுதான் இதுவென்று.
மாற்றங்கள் சிலருக்கு பிடிக்காது
மாறியதும் மாட்டிக்கொண்டதும்
அவர்கள்தான்.

விருட்சம் நடுவே
வண்ணப்பறவைகளின் பரவசம்
ஊர் குருவிகள் சுற்றிநின்று
உல்லாசப்படுத்தும்...

தொலைவினில் தெரியாமல்
திண்டாட்டங்கள்
பகல் என்றால் சூரியனின்
ஆராதனைகள்
இரவினில் சந்திரக்குளியல்
விளக்குகளின் விருந்தோம்பல்

உலக அரங்கில் மாறுபடா
ஒற்றுமைக்கான தொடர்ச்சி
அதிலும் வேற்றுமைக்கான முள்ளும்
பின்னணியில் உருவாக்கும் பணப்புரட்சியும்

உலகெல்லாம் அவதிப்படுத்தும்
ஒரு அனுமானம்
அவசரத்தில் அது புரியாது
அவ்வளவு ஆடம்பரதுக்காக
அல்ல திறமகளின் தனித்துவம்


தசாவதாரத்துடன் கூடவொன்று
கூட்டத்தின் நடுவே கூடியாடும்
கோலாகல்த்திருவிழா அது!

புதுமைப்பெண்


புதுமைப்பெண்

எண்ணங்கள் வளர்த்த
காரிருள் கருகிய கூந்தல்
சாதனை படைக்க எழுந்திடும் கைகள்
ஆணாதிக்கத்தின் எதிர்நிலைவாதம்
குற்றம் புரிந்திடும்

முடிந்தாலும் முடியாதென்று
மூடநம்பிக்கைகளுடன் கூடப்பிறந்தவர்கள்
மல்லிகையும் சமவாதம் புரியும்
அறியாது மிதவாதம்

துணிந்து நின்று போராடு
ஆயுதங்கள் எதுக்கு
அடிமைவாதங்கள்
முகவரிகள் தொலைக்கும்

அது கண்டு நடுங்காதே
ஆயுதங்களும் அழைக்கும்

சமத்துவம் புரியான்
எல்லை மீறு
சமத்துவம் சமனில் கிடக்கும்

சிவப்புதேசம் களங்கப்படுத்தும்
இருப்பிடத்தை நிரந்தரமாக்கிக்கொள்
வெளித்தேசம் வரவேற்கும்

அழகும் வர்ணனைகளும் எதற்காக
விலை பேசப்படுகின்றன
விற்பனைக்காக விலை
பேசப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்

கறுப்பு சந்தைகள் கலைக்கப்பட
வேண்டியவை
உலகசந்தை விற்பனைக்காரர்கள்
ஒப்பனைத்தோலுரித்து
இருப்பிடங்கள் தொலைக்கப்படவேண்டும்

அடுப்பங்கரை காரிருள்
கரிபடிந்தவையெல்லாம்
வெளிப்பட வேண்டும்
தடைகள் குழிதொண்டி புதைபடவேண்டும்

தேசத்தின் பிடிமானங்கள்
இல்லையாயின் தொலைந்து போகும்
எதிர்கால சந்ததிகள்

பாரதி படைத்த புதுமைப்பெண்ணாய்
புதுத்தெம்புடன் புதுத்தேசம் புனை
புகழ்பதிந்த பாதைகள் நீளட்டும்
படைப்புக்கள் புகழட்டும்

வெளிச்சத்திற்கு விலங்குடயட்டும்
வெற்றிப்படிகள் மிதித்திடு வெளியேறு
வெள்ளிக்கொலுசுகள் சத்தமிடு
அவதரிப்பாய் அவளாகத்திகள்வாய்...

காதல் ஓவியம்


காதல் ஓவியம்

உனக்கு தெரியும் நான்
சினேகிதன் என்று
நான் தெரிந்துகொள்ளவில்லை
நீ எனக்கு சினேகிதியாய்

நிமிஷங்கள் நீண்டு வருசங்களாகியும்
அப்படித்தான் தாமரையிலை
தண்ணீர் போல

பரதத்தின் பைந்தமிழ் நீ
சலங்கையோலி தீண்டும்
போதெல்லாம் பட்டென
புரக்கேறி உன்னையும் ஞாபகப்படுத்தும்

பூக்களுக்கு சொந்தக்காரன்
பறித்துக்கொண்டு பரவசமாக்கியதும்
என்னவள் உன்னினைவுகள்

பேரழகில் புதைத்த
உன் இதயக்குடிகாரன்

என்னிருக்கை
உன் இதயமாளிகை
உள்ளிருந்து கிறுக்கிய
காதல் ஓவியம்
உனக்கு வலிக்காது

உனக்கு விரும்பும்போது
நீயும் என் இதயமாளிகைக்குள்
கிறுக்கிப்பார் அதுவும்
காதலோவியமாய் மாறும்

கனவுகள் வந்துபோகும்
என்னவள் உன் வருகக்கானதொரு
கனவாய் வரக்கூடாதா?

உன் கனவுக்குள் வருவதெல்லாம்
நானாக இருந்தால் - அது
உனக்கு நிச்சயம் மறந்து போகாதா?

ஆயிரம் வார்த்தகள்
அள்ளிவீசும் உனக்கு தெரியாதா
எனக்கான வார்த்தைகளும்
உன்னிடம்தான் ஒளிந்துகிடக்கிறதென்று

எனக்கும் உனக்கும் புரியும்
ஆயிரம் மொழி
காதல்யுகம் இரண்டு போயும்
புரியவில்லை உன் மௌனமொழி

காதலுக்கு புரியுமோ
உன் மௌன மொழி புரிந்திருக்கும்
அதுவும் எனக்கு புரியவில்லை என்றோ
புரியவைத்திருப்பாய் புரியவும் வைப்பாய்.

2007-02-26




முத்தான வித்துக்கள்

இரவு பகலாய் மாறி மாறி
பூமி சுற்றிய நாட்களும்
மெல்ல மெல்ல
தேய்கின்ற நிலாவும்
விடிந்தால் உதித்திடும்
பகலவனும்
மெல்ல மெல்ல
போர்க்காலத்தில்
பாசப்பறவைகள்
பார்வையெல்லை தொலைத்து
துயரமாய் மறைந்த
நாட்களும் விரைந்தோட
காளைமாடு கட்டியிழுத்த
காளை வண்டியில் ஏறி
உல்லாசப்பட்ட நாட்களும்
முடிந்துபோன போர்க்காலத்தின்
இருபது ஆண்டுகளும்
முளை விடத்துடித்த
முத்தான விதைகளும்
படை பூட்சின் பயங்கர
சதியில் மிதியுண்ட
நாட்களும் மற்ந்துவிட முடியாத
மரணம் தான்...

17.12.2006


விடியல்

நிலாக்காலத்தில்
பாற்சோறு உண்டு
உறங்கிய காலமும்
நினைக்க நினைக்க
துன்பமானதுதான்!

நாளை பிறக்கும்
நாளை பிறக்கும்
என்ற் அகிம்சை
போராட்டமும்
நம்பிக்கையானதுதான்!

நாயாய் அலையவிட்டு
நாளுக்கு நாள்
சிவப்பு ரத்தம்
பருகப்பாக்கிறது - அந்த
இனவெறி துப்பாக்கிகள்

நாளை எழுவோம்
நாளும் வாழலாம்
நம்பிக்கையுடன்
போராடுவோம்
போர்க்கரம் தூக்கி.

நாளை கிடைக்கும்
விடியல்
நமக்கு கிடைக்கும்
விடியல்
நாளும் வாழலாம்
தமிழீழத்தில்...


19.12.2006


எண்ணங்கள்...

சிறகு விரித்த
சிட்டுக்குருவிகளுக்கு
பறக்க முடியவில்லை...
சிறகுடைத்தவன்
சீண்டிக்கொண்டிருக்கிறான்.
தினந்தினம் பறக்கநினைத்தால்
பொறாமை கொள்கிறான்.
தாண்ட நினைக்கும்
தடைகளெல்லாம் தாண்ட
முடியவில்லை தடக்கிவிடுகிறான்.
தூக்கத்திலும் துயிலமுடியவில்லை
முளிதோண்ட நினைக்கிறான்.
பாரினில் ராட்சகனாய்
படையெடுத்து பறக்கவிடவில்லை.
பட்டினியால் பலவற்றை
பறியெடுத்து பறக்கவிடவில்லை.
கனியுண்டு விதைபோடமுடியவில்லை.
அங்கங்கே அவதாரங்களாய்
அவதரித்து பறக்கவிடவில்லை
தொலைந்த தொந்தரவுகள்
தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
பாவத்திலும் பாவமென்று
பறக்கவிடவில்லை என்ற சோகம்!
முடியுமென்று முட்டிமோதி
முறியடித்து மேலெளுகின்றன
பருந்துகளெல்லாம் பம்பரமாய்
வேவு பார்த்து சுற்றின...



அணைந்தது சுடரொளி

கருகிய வானம்
குருதி படிந்த நிலவு
அந்திவானம் அரும்பி
ஆயிரம் ஆயிரம் எதிரொலிகள்
பறவைகள் அல்ல
கலைகளின் சங்கமம்
அணைந்துவிட்டது சுடரொளி
கலைத்தூது செல்ல யாருமில்லை
கலை நதி வற்றிவிட்டது.
ஆதி நூல்கள் அம்மண்மாய்
அமர்ந்து கொண்டது
திருத்தப்பட்ட நூல்கள் திருப்பப்பட்டன
கறை படிந்த புத்தகமேல்லாம்
கண்ணீர் விட்டழுதன.
காற்றுக்கும் ஓசையுண்ண்டு
கதறிய வேளைதான்.
காதல் சில்மிஷத்தில்
இனமதம் முற்று பெற்றது.
நினைவு கூரவேண்டியவரெல்லாம்
நினைவுபடுத்தியது
அமாவாசைக்குள்
புதைத்து விட்டார்கள்.
புனைபவர் எல்லாம்
பொங்கியெளவில்லை
சோர்ந்துவிட்டார்கள்
சொந்தமென்று சொல்வதற்கு
யாருமில்லை சொல்லாமல்
சொந்தமாகியவரெல்லாம்
துளிதுளியாய் நதி
நடுவே துயரத்தில்.
கலையோன் கடவுளிடம்
என்னுயிர் இறுதிமூச்சு
கலைக்காய் ஜந்தாண்டு
உபதேசிக்க வேண்டும்
பின்தன் கலைப்பயணங்கள்
முடிவுக்குவருமென்று!
இறுதி மூச்சுக்காய்
இறைவன் இருக்கவிடவில்லை.
காலனின் கைகளில் கலைத்துவிட்டான்
யாழக கதவுகள் இறுக்கி
அடைக்கப்படுகின்றது இனி யாரு
வருவார் யாழகத்தில் குடிகொள்ள.
கலைகள் சுவாசித்த கருவூலம்
கலைந்து அமரர்
சிங்கமாகி நின்றதுவே.

23.02.2007


சாதி ஏது நீதி சொல்லும்...

வானவில்லுக்கு வண்ணமடித்தவன்
நிலவறிவான் - அங்கு
படிகள் பல கடந்திட்டவன்
நிலவினில் தடங்கள் செதுக்கினான்.
நிலவுக்கு சென்றவன் நாயும்
தெருநாய்தான் நிலவறியும்.
நம் தெருவுக்குள் கிடப்பதும்
தெருநாய்தான் பிணமறியும். - ம்...
ஆம்ஸ்ரோங் காலத்துக் கதைகள்
படியேறிப் பின் பார்த்தால்
எதுவென்றறியாது வந்த பாதை!
ஏன் தயங்குகிறாய்!
படிகள் பலவேறினால்
ஒரு படியேனும் தடுக்கிவிடும்
திரும்பி பார்க்காதே
படியில்லா இமையமலை
உச்சியிலே உலாவருகிறான்
தயங்காதே தடைகளை தகர்த்தெறி
நியூட்டனும் உனக்கு துணை போவான்.
புரியும் உனக்கு
கம்பியூட்டர் காலத்தில் பிழைக்கிறான்
நம்மவன் பில்கேட்சுக்கே நன்றிகள்.
படிப்பவன் பலதறிவான் பாமரன் ஏதறிவான்?
வருவதற்கு வானவெளி கூட
கையசைத்து வரவேற்கும் - நம்
நாயகரெல்லாம் துன்பமில்லா
ஏசி வீட்டில் குளிர்காய்கிறார்கள்
வேர்வை சிந்தி உழுதுண்டு
உணவு படைத்தவரேல்லாம்
குடிசைக்குள் வெயில்காய்கிறார்கள்.
தழ்த்தாதே தலைநிமிரவை
தெருவெல்லாம் புடம் பண்ணுவான்
நாலுநாள் உண்ணாக்கிடந்தால்
நாறிப்பொகும் நம்மநாடு.
ஒய்யாரமாய் எந்திரத்தில் ஆடைத்துவையல்
சாதியென்று சதிபண்ணாதே
குளத்தோரம் குடியுருந்து
வெள்ளை வெழுப்பவனுக்கு
காறியுமிழாதே அழைத்து விருந்தோம்பு.
ஊரெல்லாம் தலைநிமிர்ந்து வாழ்வானுக்கு
தலைகுனிந்துன் கூந்தல் அழகூட்டுவானவன்
அடிமைப்படுத்தாதே அன்புகாட்டி - உன்
உள்ளத்தில் குடியிருத்திவிடு.
அலைகடலேறி அலைந்து உலைகடலில்
உயிர்கோர்த்து உடல் தேய்ந்து
கரைகடல்சேரேல் நாறிப்போகும்
உன் வயிற்றுக் கொதிப்பு
ஒதுக்காதே உன் உள்ளத்திலிடு
சாதி ஏது நீதி சொல்லும்
தலைவணங்கு தாழ்த்தி
சிரம் சிதைக்காதே தலைநிமிரவை…
















நீ சென்ற...

உன் வீட்டில்
கிழிபடாமல் கிடக்கும்
நாட்காட்டி
நீ சென்ற திகதியை
வரிந்து கட்டியபடி
காட்ட மறுக்கவில்லை.
உனக்காய் காத்திருக்கும்
கதவோசையும்
எனக்கானதொரு வியப்பு
உள்நுளையக் காத்திருக்கும்
உனக்காக ஏங்கித்தவித்த
மண்வாசனையும்
உள்நுளைய மறுக்கும்
ஓசையறியாக்கதவும்
தட்டிதட்டி தொல்லை
கொடுத்த தென்றல் காற்றும்
முற்றத்தில் கொட்டிய
இலயுதிர்காலச் சருகுகளும்
நீ உள்ளிருப்பதை காட்ட
மறுத்த கணமே
என்னிதயம் விம்மியழுதது,
உன்னைக் காண
அந்த கனத்த நாட்கள்
நீ விட்டுச்சென்ற
என்னையறியா நினைவுகள்
இறந்த சோகம்
தாங்கமுடியா தாகம்
தாகத்தை தணித்த பின்தான்
சென்ற உணர்வுகள்
வென்றுவிட்டது…
உறவோ தோற்றுவிட்டது…

(விட்டுசென்ற விக்கி அண்ணாவுக்கு சமர்ப்பணம், 03.01.2007)