2010-05-08

திசைகளும், பருவமும்

திசைகளும், பருவமும்

காலையில்
சூரியன் கண்வழித்து
எழுந்து நின்ற உன் உடல்
பின் முதுகு மேற்கிருந்த
அழுத்தம்,

வடக்கே உடல் தாங்கும்
வாடைக்காற்றும்
தெற்கே உடல் பெயரும்
சோழக் காற்றும்,

அன்று! அம்மா நிலாச்
சோறுட்டியதும்
தென்றலின் வழியில்
திசைகள் தெரிவித்ததும்
இன்றும் ஞாபகப்படுத்தும்.

இன்றும் திசைகள் அறிய…
பெயரில்லாப் புயல்களும்
சூறாவளி போல் என்னை
அடித்துச் செல்ல
மீண்டெழுந்து திசைகள்
நோக்கிய போதும்
வாடைக்கும், கச்சானுக்கும்
என் உடல் வளைந்து
மீண்ட போதும்
என் கையில் இல்லை
திசையறிகருவி.

இன்றைக்கும் நினைவுக்கு வரும்
தெற்கும், மேற்கும்
மேலாக தழுவிச் சென்ற
கத்ரீனா! வில்மா!
நாளைக்கு பருவங்கள் மாறலாம்
திசைகளும் மாறலாம்...

மௌனம்

மௌனம்



பார்த்த நாள் முதலாய்
உன் நினைவுகள்,
மீண்டும் மீண்டும்
மௌனமாய்
மௌனங்களும்
மரணிக்கும்
அந்த நிமிடங்களும்
செத்துப்போய்
உயிர்க்கத் தொடங்கிய
உன்னுள் கிடந்து
மௌனமொழி

இளைஞனே!


முன்னேற வேண்டுமா
முயற்சியை நம்பு,
பிழைக்க வெண்டுமா
உழைப்பை நம்பு,
விதியை வெல்ல வேண்டுமா
மதியை நம்பு,
வாழ்க்கையில்
வெல்ல வேண்டுமா
நல்ல பெண்ணை நம்பு

.

காதலில்

காதலில்

நெஞ்சை மறந்து விடு
என் உயிரைக்கொடுத்து விடு

நட்பினை மறந்து
காதலைத் தொடர்ந்து
அன்பினில் தவழும்
உயிரினை உரசிவிடு

இதயத்தை கிழித்து
இமைகளை வருத்தி
கண்களில் உதிரும்
கண்ணீரை துடைத்தவிடு

கனவுகள் பிறந்து
நினைவுகள் தொடர்ந்து
நெஞ்சினில் உடையும்
இதயத்தை நிலைக்கவிடு

என்னை மறந்து விடு
என் உயிரைக்கொடுத்து விடு