2007-05-27

முகவரிகள்

முகவரிகள்

நினைவுகள் சுமந்த
என் முகவரிகள்
ஒவ்வொன்றும்அழுகின்றன.
ஆத்தங்கரையோரம்
அளவளாவித்திரிந்த காலங்கள்
ஆற்றுக்குள் மூழ்கடிக்கப்பட்டு
கப்பலேறி இக்கரைக்கு அக்கரை
பச்சை என்று
மூட்டைகளைச் சுமந்து செல்கிறது
கடல்மேல் தள்ளாடி தள்ளாடி...
கடலலையைப் போலவே
வாழ்க்கையும் ஆடிச்செல்கிறது...
அது என்ன உலா...?
கிராமத்து வேதனைகள் புரியவைத்த
அந்தக்கடல் பயணம்
கடற்கரையில் அளவளாவ விட்டிருக்கிறது.
அந்த சுகங்கள் எதிலுமில்லை
வாழ்க்கை சுமையை எட்டுவும் இல்லை.
நகரத்து வாழ்க்கையது
நரகத்து வாழ்க்கையானதுதான் மிச்சம்.
சுகங்கள் குறைக்கப்பட்டு
சுமைகள் அடுக்கப்படும் வாழ்க்கை
போரால் சிதைந்த என்கிராமத்து
முகவரிகளின் வரிகள் கூட
காற்றுடன் கலக்காமல் மறைந்து விட்டதுதான்
இடி விழுந்தாற்போல் கவலை.
சுதந்திரமாய் திரிந்த என் வாழ்க்கையை
சுக்குநூறாக்கியதும் அந்த கொடிய யுத்தமே.
நிழல்களில் நியமாக வாழ்கிறேன்...!
மறு கணமே புதிய முகவரிகள்
செதுக்குவதற்கு என்னூர்கருங்கற்களை
தேடுவதாக இல்லைமனமுடைந்த திருப்பம்
சீ... என்று போன வாழ்க்கையில்
பூவை மனம் பார்க்காத
என் பிஞ்சு உள்ளம்
நகரத்து நரக வாழ்க்கையில்
மோகினியிடம் மாட்டிக்கொண்டு காதல்
வளர்த்த காலத்திலும் இன்பம் இனிக்கவில்லை.
கிராமத்தை கடந்த என் உள்ளம் நகரத்தில் நரகமாக்கி
தொடர்கின்ற வாழ்க்கை பயணங்கள் முடிவதற்கிடமில்லை
கிராம நகரமெல்லாம் கடக்கவைத்து
இறுதியில் இலவம் பஞ்சுபோல் தாய்நாட்டையே கடக்கவைத்துவிட்டதுகொடிய இனவாதப்போர்...