2007-02-26




முத்தான வித்துக்கள்

இரவு பகலாய் மாறி மாறி
பூமி சுற்றிய நாட்களும்
மெல்ல மெல்ல
தேய்கின்ற நிலாவும்
விடிந்தால் உதித்திடும்
பகலவனும்
மெல்ல மெல்ல
போர்க்காலத்தில்
பாசப்பறவைகள்
பார்வையெல்லை தொலைத்து
துயரமாய் மறைந்த
நாட்களும் விரைந்தோட
காளைமாடு கட்டியிழுத்த
காளை வண்டியில் ஏறி
உல்லாசப்பட்ட நாட்களும்
முடிந்துபோன போர்க்காலத்தின்
இருபது ஆண்டுகளும்
முளை விடத்துடித்த
முத்தான விதைகளும்
படை பூட்சின் பயங்கர
சதியில் மிதியுண்ட
நாட்களும் மற்ந்துவிட முடியாத
மரணம் தான்...

17.12.2006


விடியல்

நிலாக்காலத்தில்
பாற்சோறு உண்டு
உறங்கிய காலமும்
நினைக்க நினைக்க
துன்பமானதுதான்!

நாளை பிறக்கும்
நாளை பிறக்கும்
என்ற் அகிம்சை
போராட்டமும்
நம்பிக்கையானதுதான்!

நாயாய் அலையவிட்டு
நாளுக்கு நாள்
சிவப்பு ரத்தம்
பருகப்பாக்கிறது - அந்த
இனவெறி துப்பாக்கிகள்

நாளை எழுவோம்
நாளும் வாழலாம்
நம்பிக்கையுடன்
போராடுவோம்
போர்க்கரம் தூக்கி.

நாளை கிடைக்கும்
விடியல்
நமக்கு கிடைக்கும்
விடியல்
நாளும் வாழலாம்
தமிழீழத்தில்...


19.12.2006


எண்ணங்கள்...

சிறகு விரித்த
சிட்டுக்குருவிகளுக்கு
பறக்க முடியவில்லை...
சிறகுடைத்தவன்
சீண்டிக்கொண்டிருக்கிறான்.
தினந்தினம் பறக்கநினைத்தால்
பொறாமை கொள்கிறான்.
தாண்ட நினைக்கும்
தடைகளெல்லாம் தாண்ட
முடியவில்லை தடக்கிவிடுகிறான்.
தூக்கத்திலும் துயிலமுடியவில்லை
முளிதோண்ட நினைக்கிறான்.
பாரினில் ராட்சகனாய்
படையெடுத்து பறக்கவிடவில்லை.
பட்டினியால் பலவற்றை
பறியெடுத்து பறக்கவிடவில்லை.
கனியுண்டு விதைபோடமுடியவில்லை.
அங்கங்கே அவதாரங்களாய்
அவதரித்து பறக்கவிடவில்லை
தொலைந்த தொந்தரவுகள்
தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
பாவத்திலும் பாவமென்று
பறக்கவிடவில்லை என்ற சோகம்!
முடியுமென்று முட்டிமோதி
முறியடித்து மேலெளுகின்றன
பருந்துகளெல்லாம் பம்பரமாய்
வேவு பார்த்து சுற்றின...



அணைந்தது சுடரொளி

கருகிய வானம்
குருதி படிந்த நிலவு
அந்திவானம் அரும்பி
ஆயிரம் ஆயிரம் எதிரொலிகள்
பறவைகள் அல்ல
கலைகளின் சங்கமம்
அணைந்துவிட்டது சுடரொளி
கலைத்தூது செல்ல யாருமில்லை
கலை நதி வற்றிவிட்டது.
ஆதி நூல்கள் அம்மண்மாய்
அமர்ந்து கொண்டது
திருத்தப்பட்ட நூல்கள் திருப்பப்பட்டன
கறை படிந்த புத்தகமேல்லாம்
கண்ணீர் விட்டழுதன.
காற்றுக்கும் ஓசையுண்ண்டு
கதறிய வேளைதான்.
காதல் சில்மிஷத்தில்
இனமதம் முற்று பெற்றது.
நினைவு கூரவேண்டியவரெல்லாம்
நினைவுபடுத்தியது
அமாவாசைக்குள்
புதைத்து விட்டார்கள்.
புனைபவர் எல்லாம்
பொங்கியெளவில்லை
சோர்ந்துவிட்டார்கள்
சொந்தமென்று சொல்வதற்கு
யாருமில்லை சொல்லாமல்
சொந்தமாகியவரெல்லாம்
துளிதுளியாய் நதி
நடுவே துயரத்தில்.
கலையோன் கடவுளிடம்
என்னுயிர் இறுதிமூச்சு
கலைக்காய் ஜந்தாண்டு
உபதேசிக்க வேண்டும்
பின்தன் கலைப்பயணங்கள்
முடிவுக்குவருமென்று!
இறுதி மூச்சுக்காய்
இறைவன் இருக்கவிடவில்லை.
காலனின் கைகளில் கலைத்துவிட்டான்
யாழக கதவுகள் இறுக்கி
அடைக்கப்படுகின்றது இனி யாரு
வருவார் யாழகத்தில் குடிகொள்ள.
கலைகள் சுவாசித்த கருவூலம்
கலைந்து அமரர்
சிங்கமாகி நின்றதுவே.

23.02.2007


சாதி ஏது நீதி சொல்லும்...

வானவில்லுக்கு வண்ணமடித்தவன்
நிலவறிவான் - அங்கு
படிகள் பல கடந்திட்டவன்
நிலவினில் தடங்கள் செதுக்கினான்.
நிலவுக்கு சென்றவன் நாயும்
தெருநாய்தான் நிலவறியும்.
நம் தெருவுக்குள் கிடப்பதும்
தெருநாய்தான் பிணமறியும். - ம்...
ஆம்ஸ்ரோங் காலத்துக் கதைகள்
படியேறிப் பின் பார்த்தால்
எதுவென்றறியாது வந்த பாதை!
ஏன் தயங்குகிறாய்!
படிகள் பலவேறினால்
ஒரு படியேனும் தடுக்கிவிடும்
திரும்பி பார்க்காதே
படியில்லா இமையமலை
உச்சியிலே உலாவருகிறான்
தயங்காதே தடைகளை தகர்த்தெறி
நியூட்டனும் உனக்கு துணை போவான்.
புரியும் உனக்கு
கம்பியூட்டர் காலத்தில் பிழைக்கிறான்
நம்மவன் பில்கேட்சுக்கே நன்றிகள்.
படிப்பவன் பலதறிவான் பாமரன் ஏதறிவான்?
வருவதற்கு வானவெளி கூட
கையசைத்து வரவேற்கும் - நம்
நாயகரெல்லாம் துன்பமில்லா
ஏசி வீட்டில் குளிர்காய்கிறார்கள்
வேர்வை சிந்தி உழுதுண்டு
உணவு படைத்தவரேல்லாம்
குடிசைக்குள் வெயில்காய்கிறார்கள்.
தழ்த்தாதே தலைநிமிரவை
தெருவெல்லாம் புடம் பண்ணுவான்
நாலுநாள் உண்ணாக்கிடந்தால்
நாறிப்பொகும் நம்மநாடு.
ஒய்யாரமாய் எந்திரத்தில் ஆடைத்துவையல்
சாதியென்று சதிபண்ணாதே
குளத்தோரம் குடியுருந்து
வெள்ளை வெழுப்பவனுக்கு
காறியுமிழாதே அழைத்து விருந்தோம்பு.
ஊரெல்லாம் தலைநிமிர்ந்து வாழ்வானுக்கு
தலைகுனிந்துன் கூந்தல் அழகூட்டுவானவன்
அடிமைப்படுத்தாதே அன்புகாட்டி - உன்
உள்ளத்தில் குடியிருத்திவிடு.
அலைகடலேறி அலைந்து உலைகடலில்
உயிர்கோர்த்து உடல் தேய்ந்து
கரைகடல்சேரேல் நாறிப்போகும்
உன் வயிற்றுக் கொதிப்பு
ஒதுக்காதே உன் உள்ளத்திலிடு
சாதி ஏது நீதி சொல்லும்
தலைவணங்கு தாழ்த்தி
சிரம் சிதைக்காதே தலைநிமிரவை…
















நீ சென்ற...

உன் வீட்டில்
கிழிபடாமல் கிடக்கும்
நாட்காட்டி
நீ சென்ற திகதியை
வரிந்து கட்டியபடி
காட்ட மறுக்கவில்லை.
உனக்காய் காத்திருக்கும்
கதவோசையும்
எனக்கானதொரு வியப்பு
உள்நுளையக் காத்திருக்கும்
உனக்காக ஏங்கித்தவித்த
மண்வாசனையும்
உள்நுளைய மறுக்கும்
ஓசையறியாக்கதவும்
தட்டிதட்டி தொல்லை
கொடுத்த தென்றல் காற்றும்
முற்றத்தில் கொட்டிய
இலயுதிர்காலச் சருகுகளும்
நீ உள்ளிருப்பதை காட்ட
மறுத்த கணமே
என்னிதயம் விம்மியழுதது,
உன்னைக் காண
அந்த கனத்த நாட்கள்
நீ விட்டுச்சென்ற
என்னையறியா நினைவுகள்
இறந்த சோகம்
தாங்கமுடியா தாகம்
தாகத்தை தணித்த பின்தான்
சென்ற உணர்வுகள்
வென்றுவிட்டது…
உறவோ தோற்றுவிட்டது…

(விட்டுசென்ற விக்கி அண்ணாவுக்கு சமர்ப்பணம், 03.01.2007)